அரசு கல்லுாரியில் துாய்மைப் பணி

பணி;

Update: 2025-06-18 04:19 GMT
உளுந்துார்பேட்டையில் அரசு கல்லுாரி திறக்கப்பட உள்ளதையொட்டி துாய்மைப் பணி நடந்தது. உளுந்துார்பேட்டை, சென்னை சாலையில் மார்க்கெட் கமிட்டி அருகே தற்காலிக இடத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி துவங்கப்பட உள்ளது. அதனையொட்டி கல்லுாரி துவங்கப்பட உள்ள இடத்தைச் சுற்றியுள்ள மேடு பள்ளங்களை நெடுஞ்சாலை துறையினர் மற்றும் நகராட்சி பணியாளர்கள் ஜே.சி.பி., மூலம் சமப்படுத்தினர். இந்த பணியை மணிக்கண்ணன் எம்.எல்.ஏ., நகர மன்ற தலைவர் திருநாவுக்கரசு, துணைத் தலைவர் வைத்தியநாதன் ஆகியோர் பார்வையிட்டு பணிகளை துரிதப்படுத்தினர். முன்னாள் பேரூராட்சி சேர்மன் ஜெய்சங்கர், கவுன்சிலர்கள் மாலதி, கலா, பிடாகம் ஊராட்சி தலைவர் நந்தகுமார் உட்பட பலர் உடனிருந்தனர்.

Similar News