தெற்கு ரயில்வே நிர்வாகம் பயணிகளின் பயணத்தை கருத்தில் கொண்டு பல்வேறு முன்னேற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றது. அந்த வகையில் இன்று செங்கோட்டை திருநெல்வேலி வழித்தடத்தில் ரயில் ஸ்பீடு டெஸ்ட் நடைபெற்றது. அப்பொழுது திருநெல்வேலி நோக்கி வேகமாக அம்பாசமுத்திரம் ரயில் நிலையத்தை இந்த ரயிலானது கடந்து சென்றது. இந்த வேகமாக கடந்து சென்ற ஸ்பீட் டெஸ்ட் ரயிலை அப்பகுதியில் நின்ற ரயில் பயணிகள் கண்டு களித்தனர்.