அரசுப் பேருந்தை சிறைபிடித்து கிராம மக்கள் சாலை மறியல் போராட்டம்

ரேஷன் பொருட்கள் இருந்தும் பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்படவில்லை என குற்றச்சாட்டு;

Update: 2025-06-18 07:33 GMT
கீழக்கணவாய் கிராமத்தில் அரசு பேருந்து சிறப்பிடித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் பெரம்பலூர் அருகே உள்ள கீழக்கனவாய் சத்திரமனை தம்பரம் பட்டி ஆகிய கிராமங்களுக்கு நியாய விலை கடை பகுதிநேர கடையாக இயங்கி வருகின்றது. இந்த மூன்று கடைகளுக்கும் ஒரு மிஷின் வைத்து பொருட்கள் வழங்கி வருவதாகவும் பொதுமக்கள் குற்றச்சாட்டு வைக்கின்றனர் எதனால் கீழக்கனமாய் கிராமத்தில் 18 நாட்களாக பொதுமக்களுக்கு எந்த ஒரு பொருள்களும் வழங்காமல் அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருகிறதாகவும் எந்த ஒரு பதிலும் சொல்லாமல் செவி சாய்க்காமல் இருப்பத காரணத்தினாலும் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் இன்று காலை செட்டிகுளம் பெரம்பலூர் செல்லும் சாலையில் அரசு பேருந்து சிறைபிடித்து அரை மணி நேரமாக போராட்டத்தில் ஈடுபட்டனர் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வந்து அனைத்து கிராமங்களுக்கும் ரேஷன் பொருட்கள் வழங்குவதாக உறுதி அளித்ததின் பெயரில் போராட்டம் கைவிடப்பட்டது மீண்டும் 3 கிராமங்களுக்கும் தனித்தனியாக பணியாளர்களை நியமனம் செய்து முறையாக வழங்க வேண்டும் என பொதுமக்கள் அதிகாரியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர் இந்த சாலை மறியல் போராட்டத்தினால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Similar News