இலொயோலா கல்லூரியின் மாபெரும் கிறிஸ்து பிறப்பு விழா..
இலொயோலா கல்லூரியின் மாபெரும் கிறிஸ்து பிறப்பு விழா..;
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே மெட்டலா இலொயோலா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கிறிஸ்து பிறப்பு விழா சிறப்பாகத் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்விற்கு மூன்றாம் ஆண்டு வணிக மேலாண்மைத் துறை மாணவியும், கல்லூரி விளையாட்டுறம் போட்டிகளின் செயலருமான காயத்ரி அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். கல்லூரி அதிபர் அருட்தந்தை முனைவர் தோமினிக் ஜெயக்குமார், சே.ச. அவர்கள் சிறப்பு விருந்தினருக்குப் பொன்னாடை அணிவித்து, கிறிஸ்து பிறப்பில் எல்லோருக்கும் கருணை வேண்டும் என்ற கருத்துரை வாழ்த்துரைத் வழங்கினார். கல்லூரிச் செயலர் அருட்தந்தை முனைவர் டேனிஸ் பொன்னையா, சே.ச. அவர்கள் கிறிஸ்து பிறப்பு நாளிலில் கடின உழைப்பு, அர்பணிக்கும் உள்ளம், மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் என்ற கருத்தை முன் வைத்து ஆசியுரை வழங்கி சிறப்பித்தார். கல்லூரி முதல்வர் முனைவர் ஜா. ஜோஸ்ப்பின் டெய்சி அவர்கள் அன்பு. பண்பு. பகிர்வு, மன்னிப்பு பற்றி எடுத்துரைத்து தமது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டார். கல்லூரியின் துனை முதல்வர் அருட்தந்தை பொன் ரூபன், சே.ச. அவர்கள் கௌரவ சிறப்பு விருந்தினர் பழனிச்சாமி அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து கௌரவித்தார். கல்லூரி கலை விழா ஒருங்கிணைப்பாளர் சபரிநாதன் அவர்கள் மாணவர்களின் கல்வி மற்றும் இணைப் பணிச் சாதனைகளை வாசித்தார். சிறப்பு விருந்தினர்களை வணிகவியல் துறைப் பேராசிரியர் அனிதா அவர்களும், உள்தர மதிப்பீட்டுக் குழு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் அ. மரியே கேசியன் ஆனந்த அவர்களும் அறிமுகப்படுத்தினர். இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக புதுவை கடலூர் உயர் மறைவட்ட பேராய பதில் குருவும், போட்டித் தேர்வுகளுக்கான மறைமாவட்ட அகாடமியின் இயக்குநருமான அருட்தந்தை தேவசகாயராஜ் ஜக்கரியாஸ் அவர்கள் கலந்துகொண்டு இயேசு பாலன் ஒவ்வொரு மனிதனின் உள்ளத்திலும் பிறக்க வேண்டும், அனைவரும் அன்பு, கருணை, மனிதநேயம், சமதானம் சகோதரத்துவத்துடன் வாழவேண்டும் என்று எடுத்துரைத்து சிறப்புரை நல்கினார். மேலும், திருமனூர் கிராம பஞ்சாயத்து லயன்ஸ் குழுத் தலைவரும், முன்னாள் ஊராட்சி துணைத் தலைவருமான திரு.பழனிச்சாமி அவர்கள் கலந்துகொண்டு பிறருக்கு உதவுதல் என்பதே கிறிஸ்து பிறப்பு விழாவின் மையக் கருத்து எனக் கூறினார். இந்நிகழ்வினை கல்லூரின் பொருளாளர் தந்தை முனைவர் ஆண்டனி மார்கஸ் சே.ச., கல்லூரியின் ஆன்மீக இயக்குநர் அருட்தந்தை வே. பெனடிக்ட் சந்தோஷ் சே.ச. ஆகியோருடன் இணைந்து பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாப் பணியாளர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். விழாவின்போது இயேசு பெருமானின் பிறப்பை மையமாகக் கொண்ட நாடகம், நடனம், இசை நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டுகள் சிறப்பாக நடைபெற்றன. இறுதியாக, கல்லூரி மாணவர் பேரவைச் செயலர் பிரியதர்ஷினி அவர்கள் நன்றியுரை வழங்கினார். இந்நிகழ்வை கல்லூரியின் மாணவர் புலத் தலைவர்கள் பேராசிரியர் இராஜபிரபு மற்றும் பேராசிரியை ஜனனி ஐஸ்வர்யா ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.