லாரி - பைக் மோதலில் வாலிபர் பலி போலீஸ் ஸ்டேசன் முன்பு உறவினர்கள் சாலை மறியல்
வினோத் இறப்பிற்கு காரணமான லாரி ஓனரையும் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி பெரம்பலூர் - ஆத்தூர் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.;
திருச்சி மாவட்டம், துறையூரை சேர்ந்தவர் வினோத் (34). இவர், பெரம்பலூர் மாவட்டம், விஜயகோபாலபுரத்தில் உள்ள தனியார் டயர் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தார். வழக்கம் போல் நேற்றும் வேலை முடிந்ததும், சொந்த ஊரான துறையூருக்கு பைக்கில் சிறுவாச்சூர் - வேலூர் மங்கூன் வழியாக பைக்கில் சென்றுகொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த லாரி மீது மோதியதில் வினோத் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து வழக்கு பதிவு செய்த பெரம்பலூர் போலீசார் விசாரணை நடத்தி, லாரி டிரைவரை கைது செய்த நிலையில், இன்று காலை வினோத்தின் உறவினர்கள்ஒன்றுதிரண்டு பெரம்பலூர் காவல் நிலையம் முன்பு வினோத் இறப்பிற்கு காரணமான லாரி ஓனரையும் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி பெரம்பலூர் - ஆத்தூர் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மறியலில ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்சைஎடுப்பதாக உறுதியளித்து, உறவினர்களை கலைந்து போக செய்தனர். இதனால் அப்பகுதியில் சற்று நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. போக்குவரத்தும் சற்று நேரம் பாதிப்படைந்தது.