நெல்லையில் மருத்துவர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்
மருத்துவர்கள் ஆர்ப்பாட்டம்;
திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் இன்று (ஜூன் 18) மருத்துவர்கள் ஊதிய உயர்வு, பதவி உயர்வுகோரி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்பொழுது செய்தியாளர்களுக்கு மருத்துவர்கள் பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறுகையில் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவர்கள் பணி நியமனம் செய்ய வேண்டும். இந்த பிரச்சனையில் தமிழக முதல்வர் நேரடியாக தலையிட்டு தீர்வு காண வேண்டும் என கூறினர்.