காளி பாளையத்தில் காரின் முன் டயர் வெடித்ததால் விபத்து.ஒரே.குடும்பத்தைச் சேர்ந்த மூவர் தப்பிய அதிசயம்

காளி பாளையத்தில் காரின் முன் டயர் வெடித்ததால் விபத்து.ஒரே.குடும்பத்தைச் சேர்ந்த மூவர் தப்பிய அதிசயம்;

Update: 2025-06-18 11:16 GMT
காளி பாளையத்தில் காரின் முன் டயர் வெடித்ததால் விபத்து.ஒரே.குடும்பத்தைச் சேர்ந்த மூவர் தப்பிய அதிசயம். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் நேற்று திருச்சி மாவட்டத்தில் உள்ள கோவிலுக்குசென்று விட்டு அவர்களது காரில் இன்று கோவை நோக்கிசென்று கொண்டு இருந்தனர். இவர்களது கார் கரூர் மாவட்டம் ,அரவக்குறிச்சி, க. பரமத்தி காவல் எல்லைக்கு உட்பட்ட காளிபாளையம் அருகே வந்தபோது , காரின் முன் டயர் வெடித்து சாலையின் நடுவே இருந்த சென்டர் மீடியினில் ஏறி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் தெய்வாதினமாக காரில் பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரும் காயமின்றி தப்பினர். சம்பவம் அறிந்த க.பரமத்தி காவல்துறையினர் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News