ஏழை மாணவ, மாணவியர்களுக்கு இலவச நோட்டுகள் வழங்கிய முன்னாள் மாணவர்கள்
குமாரபாளையத்தில் ஏழை மாணவ, மாணவியர்களுக்கு இலவச நோட்டுகளை அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள் வழங்கினர்.;
குமாரபாளையத்தில் முன்னாள் அரசு பள்ளி மாணவர்கள் சார்பில், ஏழை மாணவ, மாணவியர்களுக்கு இலவச நோட்டுகள் மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா, சமூக ஆர்வலர் சித்ரா தலைமையில் நடந்தது. இதில் அதிக மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மாணவ, மாணவியர்களுக்கு தனித்திறன் போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் பேச்சு, கட்டுரை, ஓவியம், வினாடி வினா, கவிதை, ஆகிய போட்டிகளில் மாணவ, மாணவியர் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். இதில் பங்கேற்ற அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.