கல்லூரி மாணவி மாயம் போலீசார் விசாரணை

கல்லூரி மாணவி மாயம் போலீசார் விசாரணை குமாரபாளையத்தில் கல்லூரி மாணவி மாயமான வழக்கில் போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.;

Update: 2025-06-18 11:41 GMT
குமாரபாளையம் அருகே ஆலாம்பாளையம் பகுதியில் வசிப்பவர் சீதாலட்சுமி, 20, குமாரபாளையம் தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. டி.எப்.டி, மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். இவர் தன்னுடன் படித்து வந்த திருமலை என்ற மாணவனை காதலித்து வந்துள்ளார். இதனால், சீதாலட்சுமியை, அவரது பெற்றோர் கண்டித்து அனுப்பியுள்ளனர். நேற்றுமுன்தினம் கல்லூரிக்கு சென்ற சீதாலட்சுமி, வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதனால் மாணவியின் தந்தை கணேசன், 51, குமாரபாளையம் போலீசில் மகளை கண்டுபிடித்து தருமாறு புகார் கொடுத்தார். இதன்படி குமாரபாளையம் போலீசார் மாணவி சீதாலட்சுமியை தேடி வருகின்றனர்.

Similar News