கரூர் ரயில்வே நிலையத்தில் தண்டவாளம் புதுப்பிக்கும் பணி -ரயில் சேவைகளில் மாற்றம்.

கரூர் ரயில்வே நிலையத்தில் தண்டவாளம் புதுப்பிக்கும் பணி -ரயில் சேவைகளில் மாற்றம்.;

Update: 2025-06-18 12:45 GMT
கரூர் ரயில்வே நிலையத்தில் தண்டவாளம் புதுப்பிக்கும் பணி -ரயில் சேவைகளில் மாற்றம். கரூர் ரயில்வே யார்டில் ஜூன் 20, அன்று தண்டவாளப் புதுப்பித்தல் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால் சில ரயில் சேவைகளில் மாற்றங்கள் செய்யப்படும் என அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. 1. பாலக்காடு டவுனில் இருந்து காலை 06.30 மணிக்குப் புறப்படும் ரயில் எண்.16844 பாலக்காடு டவுன் - திருச்சிராப்பள்ளி எக்ஸ்பிரஸ், ஜூன் 20 அன்று கரூர் ரயில் நிலையத்தில் நிறுத்தப்படும். பணிகள் முடிந்ததும், ரயில் கரூர் ஜங்ஷனில் இருந்து திருச்சிராப்பள்ளி ஜங்ஷனுக்கு முன்பதிவு செய்யப்படாத சிறப்பு ரயிலாக இயக்கப்படும். 2. மயிலாடுதுறை சந்திப்பிலிருந்து காலை 06.00 மணிக்கு புறப்படும் ரயில் எண்.16811 மயிலாடுதுறை - சேலம் எக்ஸ்பிரஸ்,அதே நாளில் வீராராக்கியம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்படும். இந்த ரயில் மயிலாடுதுறை சந்திப்பிலிருந்து வீராராக்கியம் வரை மட்டுமே இயக்கப்படும். அந்த நாளில் வீராராக்கியம் ரயில் நிலையத்திலிருந்து சேலம் வரை இயக்கப்படாது. • சேலம் சந்திப்பிலிருந்து பிற்பகல் 2.05 மணிக்கு புறப்படும். ரயில் எண்.16812 சேலம் - மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ், அதே நாளில் கரூர் சந்திப்பிலிருந்து பிற்பகல் 15.40 மணிக்கு புறப்படும். இந்த ரயில் சேலம் சந்திப்பிலிருந்து கரூர் சந்திப்பிற்கு இயக்கப்படாது.அந்த நாளில் கரூர் சந்திப்பிலிருந்து புறப்பட்டு மயிலாடுதுறை சந்திப்பு வரை இயக்கப்படும் இன சேலம் கோட்ட ரயில்வே மக்கள் தொடர்பு அலுவலர் மரியா மைக்கேல் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Similar News