வாங்கிய கடனை முறையாக திருப்பி செலுத்தினால் கூடுதல் கடன் பெற முடியும். ஆட்சியர் விளக்கம்.
வாங்கிய கடனை முறையாக திருப்பி செலுத்தினால் கூடுதல் கடன் பெற முடியும். ஆட்சியர் விளக்கம்.;
வாங்கிய கடனை முறையாக திருப்பி செலுத்தினால் கூடுதல் கடன் பெற முடியும். ஆட்சியர் விளக்கம். உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தில் தென்னிலை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் பயனாளிகளுக்கு கடன் உதவி வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் நடைபெற்றது. இதில் மாற்றுத்திறனாளி ஒருவருக்கு ரூ.50,000, சுய உதவி குழுவினருக்கு ரூ.9.60 லட்சம் ,மத்திய காலகடனாக 13 நபர்களுக்கு 13 லட்சம் , 4- நபருக்கு பயிர் கடன் 1.85 லட்சம் வழங்கி வாழ்த்து தெரிவித்த மாவட்ட ஆட்சியர் தங்கவேல் ,இது உங்கள் வங்கி . வாங்கிய கடனை முறையாக திருப்பி செலுத்தினால் கூடுதல் கடன் நீங்கள் பெற முடியும் என பயனாளிகளிடம் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் வங்கியின் செயலாட்சியர் சதீஷ்குமார், செயலாளர் ஜோதிவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.