ஓசூர் அருகே தண்டவாளத்தில் தனியார் நிறுவன ஊழியர் சடலம்.

ஓசூர் அருகே தண்டவாளத்தில் தனியார் நிறுவன ஊழியர் சடலம்.;

Update: 2025-06-19 01:40 GMT
கிருஷ்ணகிரி மவட்டம் ஓசூர் அருகேயுள்ள ஜொனபெண்டா பகுதியில் ரெயில் தண்டவாளத்தில் ஆண் சடலம் ஒன்று உடல் சிதறிய நிலையில் கிடந்தது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த ஓசூர் ரெயில்வே போலீசார் ரெயிலில் அடிபட்டு கிடந்தவரின் சடலத்ததை மீட்டு விசாரணை நடத்தியதில் அவர் காரப்பள்ளி பகுதியை சேர்ந்த ஜனார்த்தன் என்பதும் தனியார் நிறுவன ஊழியர் என்பதும் தெரிய வந்தது. நேற்று அவர் நடைபயிற்சியின் போது தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளார். அப்போது அந்த வழியாக வந்த ரெயில் ஒன்று மோதி அடிபட்டு இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. அவர் ரெயிலில் அடிபட்டு இறந்தாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News