பள்ளிக்கு ஆர்வமுடன் சென்ற நரிக்குறவர் மாணவர்கள்

பேட்டை நரிக்குறவ மாணவர்கள்;

Update: 2025-06-19 04:52 GMT
நெல்லை மாநகர பேட்டை நரிக்குறவர் காலனியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவகுமார் உத்தரவின்பேரில் பள்ளிக்கு செல்லாத குழந்தைகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு கணக்கெடுக்கப்பட்டது. அப்பொழுது மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றது. தொடர்ந்து இன்று (ஜூன் 19) காலை முதல் பள்ளிக்கு நரிக்குறவர் மாணவர்கள் ஆர்வமுடன் பள்ளி சீருடை அணிந்து படிக்கச் சென்றனர். மாணவர்களை நரிக்குறவர் பெற்றோர்கள் வாழ்த்தி வழி அனுப்பி வைத்தனர்.

Similar News