கோவையில் ஐ.எஸ்.ஐ.எஸ் தொடர்பாக இருவரிடம் என்.ஐ.ஏ விசாரணை!
அரபிக் கல்லூரி மாணவர்களுக்கு தீவிரவாத சிந்தனைகள் ஊட்டி, அவர்களை மூளைசலவையுடன் மோசமாக வழி மாற்ற முயன்றதாக இருவரிடம் NIA விசாரணை.;
இந்தியாவின் தேசிய புலனாய்வு அமைப்பான என்.ஐ.ஏ (NIA), கோவையில் உள்ள இரு நபர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறது. போத்தனூரைச் சேர்ந்த அகமத் அலி மற்றும் உக்கடம் புல்லுக்காடு பகுதியைச் சேர்ந்த ஜாபர் சாதிக் ஆகியோர், ஐ.எஸ்.ஐ.எஸ் போன்ற தீவிரவாத அமைப்பில் ஆட்கள் சேர்க்க முயற்சித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அரபிக் கல்லூரி மாணவர்களுக்கு தீவிரவாத சிந்தனைகள் ஊட்டி, அவர்களை மூளைசலவையுடன் மோசமாக வழி மாற்ற முயன்றதாக சந்தேகம் எழுந்த நிலையில், இருவரும் கோவையின் பி.ஆர்.எஸ் காவலர் பயிற்சி பள்ளி அலுவலகத்திற்கு அழைத்து செல்லப்பட்டு, என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.