அறுபடை வீடுகளின் கண்காட்சியை பார்வையிட்ட பாண்டிச்சேரி ஆளுநர்.
முருக பக்தர் மாநாட்டில் உள்ள அறுபடை வீடுகளின் கண்காட்சியை பாண்டிச்சேரி ஆளுநர் பார்வையிட்டார்.;
மதுரைக்கு இன்று (ஜூன் .19) காலை விமானம் மூலம் வந்த பாண்டிச்சேரி ஆளுநர் கைலாசநாதன் மதுரையில் வரும் 22 ஆம் தேதி பாண்டி கோவில் அருகே முருக பக்தர்கள் மாநாடு நடைபெற உள்ள நிலையில் முருக பக்தர்கள் மாநாட்டின் அறுபடை அருட்காட்சியில் அறுபடை வீடு முருகனையும் தரிசனம் செய்தார். மாநாடு ஏற்பாடுகள் மற்றும் அறுபடை அருட்காட்சி பற்றிய விவரங்களை கேட்டறிந்தார்.