ஊத்துக்காரன் பட்டியில் திடீரென லாரி பிரேக் இட்டதால் பின்னால் வந்த ஆட்டோ மோதி விபத்து. ஒருவர் படுகாயம்.

ஊத்துக்காரன் பட்டியில் திடீரென லாரி பிரேக் இட்டதால் பின்னால் வந்த ஆட்டோ மோதி விபத்து. ஒருவர் படுகாயம்.;

Update: 2025-06-19 13:50 GMT
ஊத்துக்காரன் பட்டியில் திடீரென லாரி பிரேக் இட்டதால் பின்னால் வந்த ஆட்டோ மோதி விபத்து. ஒருவர் படுகாயம். கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தாலுகா , ரங்கநாதபுரம் , வளையல் காரன் பட்டி அருகே உள்ள புது குடி தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணி வயது 54. இவர் ஜூன் 17ஆம் தேதி இரவு 10:30-மணி அளவில் , அவரது ஆட்டோவில் கரூர் - திருச்சி சாலையில் சென்று கொண்டிருந்தார். இவரது வாகனம் ஊத்துக்காரன் பட்டி பகுதியில் செல்லும் போது, கிருஷ்ணராயபுரம் தாலுகா, போத்துராவுதன்பட்டி பகுதியைச் சேர்ந்த சண்முகசுந்தரம் வயது 27 என்பவர் வேகமாக ஓட்டிச் சென்ற லாரி , சுப்பிரமணி ஆட்டோவை முந்தி சென்றது. எவ்வித சிக்னலும் வெளிப்படுத்தாமல் லாரியை திடீரென பிரேக்கிட்டதால் சுப்பிரமணி ஓட்டி சென்ற ஆட்டோ லாரியின் பின்னால் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் சுப்பிரமணிக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டதால் உடனடியாக அவரை கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். சம்பவம் தொடர்பாக சுப்ரமணி அளித்த புகாரில் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்த காவல்துறையினர் போக்குவரத்து விதிகளுக்கு மாறாக லாரியை ஓட்டி விபத்து ஏற்படுத்திய சண்முகசுந்தரம் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் பசுபதிபாளையம் காவல்துறையினர்.

Similar News