சூரப்ப நாயக்கனூர் சகோதரி திருமணத்திற்கு அதிகப்படியாக வாங்கிய கடனை கட்ட முடியாததால் விஷம் குடித்து வாலிபர் தற்கொலை.

சூரப்ப நாயக்கனூர் சகோதரி திருமணத்திற்கு அதிகப்படியாக வாங்கிய கடனை கட்ட முடியாததால் விஷம் குடித்து வாலிபர் தற்கொலை.;

Update: 2025-06-19 15:48 GMT
சூரப்ப நாயக்கனூர் சகோதரி திருமணத்திற்கு அதிகப்படியாக வாங்கிய கடனை கட்ட முடியாததால் விஷம் குடித்து வாலிபர் தற்கொலை. கரூர் மாவட்டம் , அரவக்குறிச்சி தாலுக்கா , வேளச்செட்டியூரை சேர்ந்தவர் விக்னேஷ் வயது 32. இவர் தனது சகோதரி திருமணத்திற்காகவும் இதர செலவுக்காகவும் அதிகப்படியாக வாங்கிய கடனை கட்ட முடியாமல் அவதிப்பட்டு வந்தார். இதனால் விரக்தி அடைந்தவர் ஜூன் 17ம் தேதி மதியம் 1:30 மணி அளவில் சூரப்ப நாயக்கனூர் பகுதியில் உள்ள முத்துராஜா என்பவர் தோட்டத்தில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். உடனடியாக அவரை மீட்டு மதுரை ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆயினும் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். விக்னேஷின் தாயார் புனிதா அளித்த புகாரில் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் உயிரிழந்த விக்னேஷ் உடலை அதே மருத்துவமனை சவக்கிடங்குக்கு அனுப்பி வைத்து இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் அரவக்குறிச்சி காவல்துறையினர்.

Similar News