கோவை: சி.ஆர்.பி.எப். பயிற்சி நிறைவு விழா !

கோவை, கதிர்நாயக்கன்பாளையம் சி.ஆர்.பி.எப் பயிற்சி கல்லூரியில் 153 டிரேட்ஸ்மேன் பயிற்சியாளர்களுக்கான நிறைவு விழா கோலாகலமாக நடைபெற்றது.;

Update: 2025-06-20 01:29 GMT
கோவை, கதிர்நாயக்கன்பாளையம் சி.ஆர்.பி.எப் பயிற்சி கல்லூரியில் 153 டிரேட்ஸ்மேன் பயிற்சியாளர்களுக்கான நிறைவு விழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது. மூன்று மாத பயிற்சி முடித்து இவர்கள் டிரேட்ஸ்மேனாக பதவியேற்றனர். சமையல், தையல், மர வேலை, முடி திருத்தம், காலனி அமைத்தல் போன்ற பணிகளில் இவர்கள் பணியாற்றவுள்ளனர். விழாவில், சி.ஆர்.பி.எப் முதல்வர் மற்றும் ஐ.ஜி லாங்சிங்குக் கலந்து கொண்டு வீரர்களின் அணிவகுப்பு, தேசியக் கொடிக்கு வணக்கம், உறுதிமொழி எடுப்பு உள்ளிட்ட நிகழ்வுகளை பார்வையிட்டனர். சிறந்த வீரர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. பின் கமாண்டோ வீரர்களின் யோக சாகசம் பார்வையாளர்களை ஈர்த்தது. விழாவில் அதிகாரிகள், வீரர்களின் குடும்பத்தினர், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Similar News