கோவை: வீடுகளை நோக்கி வரும் யானைகள் !
கோவையில் நரசிபுரம் பகுதியில் ஒரு வீட்டில் புகுந்த யானை மாடுகளுக்கு வைத்திருந்த உணவுகளை சாப்பிட்டு சேதப்படுத்தியது.;
கோவை தொண்டாமுத்தூர் அருகே நரசிபுரத்தில், விவசாயி பாலுவின் வீட்டில் கேட்டை உடைத்து நேற்று இரவு புகுந்த யானை, மாடுகளுக்கான புண்ணாக்கு மற்றும் தவிடுகளை சாப்பிட்டது. அச்சத்தில் உறைந்த குடும்பத்தினர் வனத்துறையை தொடர்பு கொண்டனர். வனத்துறை அதிகாரிகள் உடனே விரைந்து வந்த போதும் அவர்களின் ஜீப் பழுதாகியது. பொதுமக்கள் உதவியுடன் சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் நீண்ட நேரம் போராடி யானையை வனத்திற்குள் விரட்டினர்