தமிழக ஆளுநர் இன்று மதுரை வருகை
மதுரைக்கு இன்று இரவு தமிழக ஆளுநர் வருகை தர உள்ளார்;
தமிழக ஆளுநர் ஆர் என் ரவி அவர்கள் இன்று (ஜூன்.20)இரவு 7:35 மணி அளவில் சென்னையிலிருந்து விமான மூலம் மதுரை வருகிறார். அங்கு இருந்து அவர் புறப்பட்டு ஜி ஆர் டி கிராண்ட் ஹோட்டலில் தங்குகிறார். நாளை (ஜூன்.21) சனிக்கிழமை காலை 7 மணியளவில் வேலம்மாள் குளோபல் பள்ளியில் நடக்கும் சர்வதேச யோகா தின விழா கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். அதன் பின்னர் மீண்டும் தனியார் ஹோட்டலில் ஓய்வெடுத்த பின்பு மதியம் 12 மணியளவில் மதுரையிலிருந்து விமானம் மூலம் சென்னை செல்கிறார். தமிழக ஆளுநரின் வருகையை ஒட்டி போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள்.