தியாகதுருகம் வட்டாரம் வட தொரசலுார் கிராமத்தில் நடக்கும் வேளாண் திட்டங்களை கள்ளக்குறிச்சி மாவட்ட கண்காணிப்பு அலுவலரான நில அளவை மற்றும் நில வரி திட்ட இயக்குநர் மதுசூதன்ரெட்டி ஆய்வு செய்தார். வேளாண்மைத்துறை மூலம் முதல்வரின் 'மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்' திட்டத்தில் பசுந்தாள் விதை பயிரிட்ட விவசாயி மணிகண்டனின் வயலை பார்வையிட்டு, மானியம் மற்றும் பசுந்தாள் உரப் பயிர் சாகுபடி செய்வதின் நன்மைகள் குறித்து கேட்டறிந்தார். ஆய்வில் கலெக்டர் பிரசாந்த், வேளாண்மை இணை இயக்குநர் சத்தியமூர்த்தி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் ஜோதிபாசு, வேளாண்மை உதவி இயக்குநர் ரகுராமன் அங்கு, துணை வேளாண்மை அலுவலர் சிவநேசன், உதவி வேளாண்மை அலுவலர் துரைராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.