குமரி மாவட்டம் கோதையாறு அடுத்த குற்றியாறு வனப்பகுதியில் மாற்று திறனாளியான ராஜன் என்பவர் நேற்று சக தொழிலாளர்களுடன் அப்பகுதியில் ரப்பர் பால் வெட்டிக்கொண்டிருந்தார். அப்போது கட்டு யானை ஓன்று அவரை காலால் மிதித்துள்ளது. இதில அவரது வலது கால் எலும்பு முறிவு ஏற்பட்டது. ராஜன் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இதையடுத்து இன்று அந்த பகுதி அரசு ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்து, அரசு தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசு ரப்பர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.