குமரி மாவட்டம் கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் சார்பில் புதுக்கடை பேருந்து நிலையத்தில் ராகுல் காந்தியின் 55 ஆவது பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் ராஜேஷ் குமார் எம் எல் ஏ தலைமை வகித்தார். தொடர்ந்து 55 கிலோ கேக் வெட்டப்பட்டது. இதையடுத்து எம்எல்ஏ தனது சொந்த நிதியில் இருந்து கிள்ளியூர் தொகுதிக்குட்பட்ட அனைத்து பகுதிகளை சேர்ந்த 55 ஏழை பெண்களுக்கு தையல் மிஷின்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தொடர்ந்து அவர் கூறுகையில், - காங்கிரஸ் தேதிய கட்சி . வரும் தமிழக தேர்தலில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என கேட்போம் என கூறினார். நிகழ்ச்சியில் குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் பினுலால் சிங், மாநில மீனவர் காங்கிரஸ் தலைவர் ஜோர்தான், மற்றும் வட்டார, நகர, ஊராட்சி காங்கிரஸ் நிர்வாகிகள் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.