மாவட்ட எஸ்.பியிடம் மனு அளித்த முன்னாள் அமைச்சர்

மதுரை மாவட்ட எஸ்பியிடம் அதிமுக முன்னாள் அமைச்சர் உதயகுமார் மனு அளித்தார்.;

Update: 2025-06-20 07:27 GMT
அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடியார் அவர்கள் மீது சமூக வலைத்தளங்களில் அவதூறுகளை பரப்பும் மக்கள் விரோத திமுக அரசின் IT Wing மீது நடவடிக்கை எடுக்க கோரி சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத்தலைவர், மதுரை புறநகர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளரும் திருமங்கலம் தொகுதி எம்எல்ஏவுமான ஆர்.பி.உதயகுமார் அவர்கள் தலைமையில் இன்று ( ஜூன்.20) அதிமுக முக்கிய நிர்வாகிகள் பலர் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் அவர்களிடம் புகார் மனு அளித்தார்கள்.

Similar News