முன்னாள் அமைச்சரின் உருவ பொம்மையை எரிக்க திமுகவினர் முயற்சி
மதுரை அருகே முன்னாள் அமைச்சரின் உருவ பொம்மையை எரிக்க திமுகவினர் முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.;
திமுக தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகி டிஆர்பி ராஜா ரோட்டில் நடமாட முடியாது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் இன்று கூறியதற்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரை விரகனூர் சுற்றுச்சாலை அருகே இன்று (ஜூன் .20) மாலை உதயகுமார் புகைப்படம் பொருந்திய உருவ பொம்மையை திமுகவினர் எரிக்க முற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அதனை தடுத்தி நிறுத்தினார்கள். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.