பிரிந்து வாழ்ந்த மனைவி அவதூறு பரப்பிய கணவன் கைது
பிரிந்து வாழ்ந்த மனைவி மீது அவதூறு பரப்பி துன்புறுத்தல் : சமூக வலைதள பிரபலம் கைது;
பிரிந்து வாழ்ந்த மனைவி மீது அவதூறு பரப்பி துன்புறுத்தல் : சமூக வலைதள பிரபலம் கைது பிரிந்து வாழ்ந்த மனைவி மற்றும் அவர் நடத்தி வரும் தொழில் தொடர்பாக நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்களிடம் அவதூறு பரப்பிய வழக்கில் சமூக வலைதள பிரபலம் விஷ்ணு விருகம்பாக்கத்தில் கைது செய்யப்பட்டார். சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் விஷ்ணுகுமார் என்பவர் வசித்து வருகிறார். சமூக வலைதள பிரபலமான இவருக்கும் அஸ்மிதா என்ற பெண்ணுக்கும் கடந்த 2017 ஆம் ஆண்டு காதல் திருமணம் நடைபெற்றது. 2018 ஆம் ஆண்டு பெண் குழந்தை பிறந்த நிலையில் 2019 ஆம் ஆண்டில் வருமான கணக்கு வழக்கு தொடர்பாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இந்த பிரச்சனையில் அஸ்மிதா மற்றும் அவரது தாய் தங்கையை விஷ்ணுகுமார் மற்றும் அவரது தாய் தாக்கியுள்ளனர். இது தொடர்பாக வடபழனி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரிக்கப்பட்டது. காவல் நிலையத்தில் ஆஜராகி தனது மனைவியிடம் மன்னிப்பு கேட்டு சேர்ந்து வாழ விரும்புவதாக விஷ்ணுகுமார் தெரிவித்துள்ளார். அதன் பின்னர் இருவரும் சேர்ந்து வாழ்ந்து வந்தனர். இதை எடுத்து இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டு 2022 ஆம் ஆண்டில் நீதிமன்றத்தை நாடி விவாகரத்து பெற்றனர். ஆனால் 2023 ஆம் ஆண்டின் தான் திரும்பி விட்டதாக கூறி மீண்டும் மனைவி அஸ்மிதாவுடன் சேர்ந்து விஷ்ணுகுமார் வாழ்ந்து வந்தார். ஆனால் மீண்டும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த ஏப்ரல் 15ஆம் தேதி முதல் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் திரிந்து வாழும் மனைவி அஸ்மிதா பற்றியும் அவர் நடத்தி வரும் அஸ்மிதா மேக் ஓவர் எனும் பற்றியும் பல்வேறு அவதூறுகளை நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்களிடம் பரப்பி வந்துள்ளார். இது தொடர்பாக விருகம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அஸ்மிதா புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார் விஷ்ணு குமாரை கைது செய்துள்ளனர்.