ராசிபுரத்தில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்..
ராசிபுரத்தில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்..;
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் வழக்கறிஞர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தமிழகத்தின் நடைபெற்று வரும் வழக்கறிஞர் படுகொலை கண்டித்தும், வழக்கறிஞர்களுக்கு பாதுகாப்பு சட்டம் உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழகத்தில் கடந்த சில வாரத்தில் வழக்கறிஞர் வெட்டி கொலை செய்த சம்பவத்தில் தொடர்புடையவர்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி வழக்கறிஞர்கள் நீதிமன்ற பணிகளை புறக்கணித்து, தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் P. காமராஜ், ராசிபுரம் குற்றவியல் சங்கத்தின் தலைவர் M.வாசுதேவன் ஆகியோர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில், வழக்கறிஞர்கள் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி கூட்டமைப்பின் இணைச்செயலாளர் R K.T. தங்கதுரை, N.செல்வகுமார், தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி கூட்டமைப்பின் தகவல் தொழில்நுட்ப பிரிவு துணைத் தலைவர் P. சுந்தர்ராஜன், ஹரிஹரன், ரமேஷ், யுவராஜா, சுரேஷ்குமார், ராதா சந்திரசேகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.