சந்தைப்பேட்டை கிராமத்தில் சரிவர எரியாத தெருவிளக்கு
சரிவர எரியாத தெருவிளக்கு;
திருநெல்வேலி மாவட்டம் சீவலப்பேரி பஞ்சாயத்திற்கு உட்பட்ட சந்தைப்பேட்டை கிராமத்தில் கடந்த சில நாட்களாக தெரு விளக்குகள் சரிவர எரிவதில்லை. இதன் காரணமாக அப்பகுதியில் செல்லக்கூடிய பொதுமக்கள், பள்ளி,கல்லூரிக்கு சென்று வரக்கூடிய மாணவர்கள் பெரிதும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். எனவே சரியான முறையில் தெரு விளக்குகள் எரிவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.