அகில பாரதியா க்ராஹக் பஞ்சாயத்து அமைப்பின் ஆலோசனை கூட்டம்

குமாரபாளையத்தில் அகில பாரதியா க்ராஹக் பஞ்சாயத்து அமைப்பின் ஆலோசனை கூட்டம் நடந்தது.;

Update: 2025-06-20 15:00 GMT
குமாரபாளையத்தில் அகில பாரதியா க்ராஹக் பஞ்சாயத்து அமைப்பின் ஆலோசனை கூட்டம், மாவட்ட பொறுப்பாளர் சபரிநாதன் தலைமையில் நடந்தது. இக்கூட்டத்தில் நமது அமைப்பை வலுப்படுத்த வேண்டும், அதிக உறுப்பினர்கள் சேர்க்க வேண்டும், பொதுமக்களிடையே ஆன்மீக கருத்துக்கள் எடுத்துரைக்க வேண்டும், முருக பக்தர் மாநாட்டிற்கு நமது அமைப்பின் சார்பில் டிராவல்ஸ் வாகனம் அமைத்து, நமது உறுப்பினர்களை ஒருங்கிணைத்து அழைத்துச் செல்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் குமாரபாளையம் பொறுப்பாளர் ராஜேந்திரன் தங்கவேல், ஜெகதீசன், உதயசூரியன், வாசுதேவன், மாதேஸ்வரன், பாலகிருஷ்ணன், கிருஷ்ணன் உள்பட பலர் பங்கேற்றனர்.

Similar News