கண்தானம் வழங்கிய குடும்பத்தாருக்கு பாராட்டு

குமாரபாளையத்தில் கண்தானம் வழங்கிய மூதாட்டி குடும்பத்தாருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.;

Update: 2025-06-20 15:15 GMT
குமாரபாளையத்தில் கண்தானம் வழங்கிய மூதாட்டி குடும்பத்தாருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இது குறித்து தளபதி லயன்ஸ் சங்க கண்தான திட்ட மாவட்ட தலைவர் ஜெகதீஷ் கூறியதாவது: குமாரபாளையம் ராமராஜபவன் ஓட்டல் நடத்தி வரும் சந்திரசேகரனின் தாயார் செல்லம்மாள், 63, வயது முதிர்வால் இறந்தார். இவரது கண்களை தானமாக வழங்க மகன் சந்திரசேகரன், பேரன் அருண் குடும்பத்தார் விருப்பம் தெரிவித்தனர். இதன்படி, தளபதி லயன்ஸ் சங்க ஏற்பாட்டின் பேரில், ஈரோடு அரசன் கண் மருத்துவமனை மருத்துவ குழுவினர் நேரில் வந்து, கண்களை தானமாக பெற்றனர். இதற்காக தளபதி லயன்ஸ் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் சந்திரசேகரன் குடும்பத்தாருக்கு பாராட்டு தெரிவித்தனர். இருக்கும் வரை ரத்த தானம், இறந்த பின் கண் தானம் செய்யுங்கள். தொடர்புக்கு : 98432 61441.

Similar News