திமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு மீது நடவடிக்கைக் எடுக்கக் கோரி அரியலூர் எஸ்பி}யிடம் அதிமுக}வினர் மனு அளிப்பு

திமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு மீது நடவடிக்கைக் எடுக்கக் கோரி அரியலூர் எஸ்பி}யிடம் அதிமுக}வினர் மனு அளித்தனர்.;

Update: 2025-06-20 15:34 GMT
அரியலூர், ஜூன் 20- திமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு மீது நடவடிக்கைக் எடுக்கக் கோரி, அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபக்சிவாச்}யிடம் அதிமுகவினர் வெள்ளிக்கிழமை மனு அளித்தனர். அதிமுக மாவட்டச் செயலரும், முன்னாள் அரசு தலைமைக் கொறடாவுமான தாமரை எஸ்.ராஜேந்திரன் தலைமையில்  அக்கட்சியினர் அளித்த மனு: திமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாநிலச் செயலரும், தொழில்துறை அமைச்சருமான டி.ஆர்.பி. ராஜா, நிர்வகித்து வரும் திமுகவின் அதிகாரப்பூர்வ தகவல் தொழில் நுட்பப்பிரிவு எக்ஸ் தளத்தில், கடந்த 17.6.2025 அன்று அதிமுக பொதுச் செயலரும், தமிழக முன்னாள் முதல்வரும், தற்போதைய சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவருமான கே.பழனிசாமி குறித்து ஒரு கேலி சித்திரத்துடன் பொய்யான செய்தியுடன் இணைத்து பதிவிட்டுள்ளார். இந்த பதிவானது முன்னாள் முதல்வர் கே.பழனிசாமியை அவமதிக்கும் வகையிலும், அவரை பின்பற்றும் கட்சி தொண்டர்களை புண்படுத்தும் வகையிலும் உள்ளது. மேலும், அவரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் திட்டமிட்ட சதி செயலாக உள்ளது. எங்கள் கட்சியின் அடையாளமான அதிமுக கொடியை அவமதிக்கும் வகையில் வெளியிட்டுள்ளனர். எனவே, அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா மற்றும் பதிவிட்டவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அந்த கேலி சித்திரத்தை உடனடியாக நீக்க வேண்டும். இல்லையென்றால் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்துள்ளார்.  மனு அளிக்கும் போது, தொடர்ந்து அக்கட்சியின் வழக்குரைஞர் அணியினரும் மனு அளித்தனர். மனு அளிக்கும் போது, அக்கட்சியின் மாவட்ட அவைத் தலைவரும், ஜெயங்கொண்டம் முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினருமான ராமஜெயலிங்கம், அண்ணா தொழிற் சங்க மாவட்டச் செயலர் கல்லங்குறிச்சி பாஸ்கர்,  அம்மா பேரவை இணைச் செயலர் பிரேம்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.   :

Similar News