கரூர் மாநகராட்சி- வளர்ச்சித் திட்டப் பணிகளை துவக்கி வைத்தார் செந்தில் பாலாஜி.

கரூர் மாநகராட்சி- வளர்ச்சித் திட்டப் பணிகளை துவக்கி வைத்தார் செந்தில் பாலாஜி.;

Update: 2025-06-20 15:57 GMT
கரூர் மாநகராட்சி- வளர்ச்சித் திட்டப் பணிகளை துவக்கி வைத்தார் செந்தில் பாலாஜி. கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட கூத்தரிசிக்கார தெருவில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 2024-25 ஆண்டு கல்வி நிதியிலிருந்து ரூபாய் ஒன்பது லட்சம் மதிப்பீட்டில் தனிப்பாதை அமைத்து பேவர் பிளாக் கற்கள் அமைக்கும் பணியை துவக்கி வைத்தார் செந்தில் பாலாஜி. இதனைத் தொடர்ந்துகரூர் மாநகராட்சி சார்பில் நூலகம் மற்றும் அறிவு சார்ந்த மையத்தை திறந்து வைத்து பார்வையிட்டார் இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் கரூர் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன்,துணை மேயர் தாரணி சரவணன், மாநகராட்சி மண்டல தலைவர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் , ஊர் பொதுமக்கள் ,பள்ளி மாணவியர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

Similar News