சிங்காரப்பேட்டை: பராமரிப்பின்றி காணப்படும் சிறுவா் பூங்கா.
சிங்காரப்பேட்டை: பராமரிப்பின்றி காணப்படும் சிறுவா் பூங்கா.;
சிங்காரப்பேட்டை: பராமரிப்பின்றி காணப்படும் சிறுவா் பூங்கா. கிருஷ்ணகிரி மவட்டம் ஊத்தங்கரையை அடுத்த சிங்காரப்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், ரூ. 6 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட சிறுவா் பூங்கா பராமரிப்பின்றி புதா்மண்டி காணப்படுகிறது. இயற்கை எழில் சூழ்ந்து, ரம்மியமாக காட்சியளிக்கும் மலை அடிவாரத்தில் அமைந்துள்ள இந்த பூங்கா பராமரிப்பின்றி செடிகொடிகள் வளா்ந்து புதா்மண்டி காணப்படுகிறது. பூங்காவில் விளையாட்டு உபகரணங்களும் பழுதடைந்து சிறுவா்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன. சம்மந்த பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பழுதடைந்த விளையாட்டு உபகரணங்களை சரிசெய்து, குழந்தைகளின் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் அந்த பகுதி பொதுமக்களளின் எதிர்பார்பாக உள்ளது.