கோவை: பள்ளங்களை சீரமைத்த காவலர்கள் !
சாலையின் நடுவே ஏற்பட்ட பள்ளத்தை மண் கொண்டு சீரமைத்த காவல் ஆய்வாளர்களுக்கு பொதுமக்கள் பாராட்டு.;
கோவை உக்கடம்-சுங்கம் சாலையில் மாநகராட்சி பணிக்காக தோண்டப்பட்ட குழிகள் முறையாக மூடப்படாததால், வாகன விபத்துகள் நடைபெற்று வந்தன. இந்த நிலையை கவனித்த ரேஸ்கோர்ஸ் காவல் ஆய்வாளர் கந்தசாமி மற்றும் உதவி ஆய்வாளர் கார்த்திக் ஆகியோர் நேற்று சாலையில் ஏற்பட்ட பள்ளங்களை மண் மூலம் தற்காலிகமாக சீரமைத்தனர். பொதுமக்களின் சிரமத்தை குறைத்த இந்த செயலுக்கு வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளனர். காவல்துறையின் சமூகப் பொறுப்புணர்வை எடுத்துக்காட்டும் இந்த நிகழ்வு, பொதுமக்களிடம் காவலர்கள் மீதான மரியாதையை அதிகரித்துள்ளது.