கோவை: குடியிருப்புகளில் ஒற்றை யானை உலா- பொதுமக்கள் அச்சம்

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் பகுதிகளில் ஒற்றை யானை ஒன்று கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் குடியிருப்பு பகுதிகளில் உலா வரும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது.;

Update: 2025-06-21 01:21 GMT
கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் பகுதிகளில் ஒற்றை யானை ஒன்று கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் குடியிருப்பு பகுதிகளில் உலா வரும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த யானை வீடுகளில் வைக்கப்பட்டிருக்கும் ரேஷன் அரிசி, மாடுகளுக்கான உணவுகளை தேடி வருகின்றது. அண்மையில் வடவள்ளி அருகே ஐ.ஓ.பி காலனியில் நேற்று இரவு இந்த யானை வந்துள்ளதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த மாதங்களில் இதே பகுதியில் யானை தாக்கியதில் ஒரு முதியவர் உயிரிழந்த சம்பவம் மக்கள் மனதில் பயத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே அசம்பாவிதம் ஏற்படும் முன், வனத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கைகளை எடுத்து, யானை நகரப்பகுதிக்குள் புகாதவாறு தடுக்க பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Similar News