சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு மாணவர்களின் யோகா

மதுரை ஒத்தக்கடை அருகே சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவர்கள் யோகா செய்தனர்;

Update: 2025-06-21 01:30 GMT
மதுரை மாவட்டம் மதுரை கிழக்கு ஒன்றியம் எல் கே பி நகர் அரசு பள்ளியில் சர்வதேச யோகா தினம் தலைமை ஆசிரியர் தென்னவன் தலைமையில் நடைபெற்றது. ஆசிரியர் ராஜ வடிவேல் வரவேற்றார். ஆசிரியர் சுகுமாறன் முன்னிலை வகித்தார். யோகா பயிற்றுநர் சுரேந்திரன் பல்வேறு வகையான ஆசனங்கள், அதன் நன்மைகள் ஆகியவற்றை கூறி ஆசனங்களை செய்து காட்டினார். மாணவ, மாணவிகள் யோகா மற்றும் ஆசனங்கள் செய்தனர். ஆசிரியை விஜயலட்சுமி நன்றி கூறினார். நிகழ்வில் மாணவ, மாணவிகள், பெற்றோர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Similar News