குமரி மாவட்டம் நாவல்காடு மந்தானபுரம் பகுதியை சேர்ந்தவர் போலீஸ் ஏட்டு ஞான பிலிப். இவருக்கு அம்பிலி (44) என்ற மனைவியும் இரண்டு பெண் பிள்ளைகளும் உள்ளனர்கள். இவரது மனைவிகடன் பிரச்சனை காரணமாக மன வருத்தத்தில் இருந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு தனது கணவர் வீட்டில் இல்லாத நேரமாக பார்த்து ஏதோ விஷம் குடித்து வீட்டிலுள்ள ஒரு அறையில் படுத்துள்ளார். இவரது பிள்ளைகள் கதவை திறக்க பல முறை கூறியும் திறக்காததால் அவர்கள் பயந்து போய் அவரது அப்பாவிற்க்கு போன் செய்துள்ளார்கள். அவசரமாக வீட்டிற்க்கு வந்த ஞான பிலிப் கதவை உடைத்து அம்பிலியை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளார். அவரை பரிசோதித்த மருத்துவர் அவர் இறந்து விட்டதாக கூறியுள்ளார். இது குறித்து பூதப்பாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்