குமரி மாவட்டம் கடையாலுமூடு பகுதியில் போதை பொருள் விற்பனை நடப்பதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்குள்ள சிஎஸ்ஐ சர்ச் அருகே மூன்று வாலிபர்கள் சந்தேகத்துக்கு இடமாக நின்று கொண்டு இருந்தனர். போலீசார் பிடித்த போது அவர்களிடம் 350 கிராம் கஞ்சா மற்றும் 225 கிராம் எம்டிஎம்ஐ எனப்படும் மெத்தபட்டைமைன் என்ற உயர்ரக போதை பொருள்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. போலீசார் அவர்களை கைது செய்து விசாரித்ததில் இவர்கள் கேரள பகுதியை சேர்ந்த ஹெசால் (22), சிகாந்த் பைசி (24) மற்றும் சாஜி (30) என்பது தெரியவந்தது. கடையாலுமூடு போலீசார் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.