குருசடி உண்டியல் உடைப்பு போலீசில் புகார்

நித்திரவிளை;

Update: 2025-06-21 03:27 GMT
குமரி மாவட்டம் கடற்கரை கிராமமான இரவிபுத்தன் துறையில் புனித சூசையப்பர் ஆலயம் மற்றும் குருசடி ஒன்று உள்ளது. இந்த குருசடியில் தினமும் பிரார்த்தனைக்காக ஏராளமானவர் வந்து செல்வது வழக்கம். இந்த நிலையில் நேற்று காலை குருசடியை சுத்தம் செய்ய அங்குள்ள பெண் ஒருவர் சென்றுள்ளார். அப்போது குரு செடியின் சொரூபத்தின் பின்புறத்தில் இருந்த காணிக்கை பெட்டி உடைக்கப்பட்ட நிலையில் காணப்பட்டது. அதிலிருந்த பணம் திருடப்பட்டிருந்தது.  உடனடியாக அந்தப் பெண் கோவில் நிர்வாகிகள் இடம் தகவல் தெரிவித்தா. இது தொடர்பான புகாரின் பேரில் நித்திரவிளை போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

Similar News