காதலி வீட்டில் ஐ டி இன்ஜினியர் மர்ம சாவு

குலசேகரம்;

Update: 2025-06-21 03:34 GMT
குமரி மாவட்டம்  குலசேகரம்  பகுதியை சேர்ந்தவர் தனுஷ் (22) இவர் கோவையில் ஐடி இன்ஜினியராக பணிபுரிந்து வந்தார். இவர் பள்ளியில் படிக்கும் போது ஒரு ஒரு பெண்ணை காதலித்து உள்ளார். இருவரும் வெவ்வேறு மதத்தை சார்ந்தவர்கள் என்பது தெரிகிறது.  தற்போது காதலிக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து திருமணம் நிச்சயம் செய்துள்ளனர். தனுஷ் காதலின் வீட்டுக்கு சென்று பெண் கேட்டுள்ளார். ஆனால் அவர்கள் மறுத்துள்ளனர். நிலையில் நேற்று முன்தினம் இரவில் காதலியின் வீட்டுக்கு வந்த தனுஷ், காதலி வீட்டு மேல்மாடி பகுதியில் தூக்கில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். குலசேகரம் போலீசார் தனுஷ் தற்கொலை செய்து கொண்டாரா?  அல்லது சாவில் மர்மம் உள்ளதா? என விசாரித்து வருகின்றனர்.

Similar News