குமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே புன்னமூட்டு கடை பகுதியில் தனியார் நித்தில் உள்ள ஒரு பெரிய அயனி மரம் நேற்று மாலையில் சாலையின் குறுக்கே விழுந்தது. இதில் மின் கம்பிகள் அறுந்து விழுந்தன. மர விழுந்த நேரத்தில் அந்த பகுதி வழியாக பொதுமக்கள் மற்றும் வாகனங்கள் எதுவும் செல்லாததால் அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டன. மரம் சாலையின் குறுக்கே விழுந்து கிடந்ததால் உரம்பு, கொல்லங்கோடு சாலையில் போக்குவரத்து தடைப்பட்டது. அந்த பகுதி வழியாக செல்ல வேண்டிய வாகனங்கள் கொல்லங்கோடு அருகே கேரளப் பகுதியான பழைய உச்சக்கடை வழியாக திருப்பி விடப்பட்டன. தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு சென்ற கொல்லங்கோடு தீயணைப்பு வீரர்கள் மரத்தை வெட்டி அகற்றினர்.