வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டம்;

Update: 2025-06-21 04:09 GMT
கள்ளக்குறிச்சியில் நடந்த வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். தமிழகத்தில் வழக்கறிஞர்களின் தொடர் படுகொலையை கண்டித்தும், பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக இயற்ற வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தியும் கள்ளக்குறிச்சி வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு வழக்கறிஞர்கள் சங்க தலைவர் சேகர் தலைமை தாங்கினார். செயலாளர் பழனிவேல், சங்க நுாலகர் பாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொருளாளர் இளையராஜா வரவேற்றார். தொடர்ந்து வழக்கறிஞர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

Similar News