நெல்லை மாநகர பேட்டை நரிக்குறவர் காலனியை சேர்ந்த காந்தி (45) என்பவர் இன்று அதிகாலை அப்பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாள பகுதியில் சிறுநீர் கழிப்பதற்காக சென்றுள்ளார். அப்பொழுது அந்த வழியாக சென்ற ரயில் இவர் மீது மோதியதில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார்.இது குறித்து நெல்லை சந்திப்பு ரயில்வே காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.