கோவை: வாகனம் ஓட்டியை விரட்டியை யானை !
அதிரப்பள்ளி–வால்பாறை சாலையில், காட்டு யானை ஒன்று சாலையில் வந்த வாகன ஓட்டியைக் துரத்தும் காட்சி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.;
அதிரப்பள்ளி–வால்பாறை சாலையில், காட்டு யானை ஒன்று சாலையில் வந்த வாகன ஓட்டியைக் துரத்தும் காட்சி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று சாலையில் பயணித்த வாகன ஓட்டியரை நோக்கி திடீரென விரைந்த யானையை கண்டு, அவர் தனது பைக்கை விட்டுவிட்டு தப்பியோடியுள்ளார். ஆனால் யானையும் தொடர்ந்து பின்னால் விரைந்தது. இந்த சம்பவம் வீடியோவாக பதிவு செய்யப்பட்டு சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக வனத்துறை மற்றும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.