கோவை: தாயை பிரிந்து தவிக்கும் குட்டி யானை !

சிறுமுகை வனப்பகுதியில், தாயை பிரிந்து தனியாகச் சுற்றித் தவித்துக் கொண்டிருக்கும் குட்டி யானை.;

Update: 2025-06-21 07:16 GMT
சிறுமுகை வனப்பகுதியில், தாயை பிரிந்து தனியாகச் சுற்றித்தவித்துக் கொண்டிருந்த குட்டி யானை ஒன்றுவனத்துறையின் வரை கவலை அடையச் செய்துள்ளது. ஜூன் 17 ஆம் தேதி பெத்திக்குட்டை பகுதியில் ரோந்து பணியில் இருந்த வனத்துறையினர், பவானிசாகர் அணை நீர்ப்பிடிப்பு பகுதியில் இந்த குட்டி யானையை கண்டுபிடித்தனர். தொடர்ந்து, அது வனப்பகுதிக்குள் சென்று மீண்டும் வெளியில் வருவதாக கவனிக்கப்பட்டுள்ளது. தற்போது, அந்த குட்டியானை முகாமிட்டிருந்த யானைகளின் கூட்டத்திற்கருகில் சென்று நேற்று சேர்ந்த நிலையில், வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

Similar News