தண்ணீர்பள்ளி சித்தார்த் பப்ளிக் சிபிஎஸ்இ சார்பில் யோகா தின விழா
11 ஆவது சர்வதேச யோகா தின விழா;
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே தண்ணீர்பள்ளியில் அமைந்துள்ள சித்தார்த் பப்ளிக் சிபிஎஸ்இ பள்ளி வளாகத்தில் பதினோராவது சர்வதேச யோகா தின விழா இன்று கொண்டாடப்பட்டது. பள்ளி தாளாளர் சித்தார்த்தன் தலைமை வகித்தார். பள்ளி முதல்வர் மற்றும் கல்வி இயக்குனர் சிவா முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக திருச்சி மனவளக்கலை மன்ற தலைவர் ஜம்புலிங்கம், நங்கவரம் காவல்துறை ஆய்வாளர் ரூபி ஆகியோர் கலந்து கொண்டனர். ஆசிரியர்கள் யோகா பற்றிய பயனுள்ள தகவல்களை மாணவர்களுக்கு எடுத்துரைத்தனர். தொடர்ந்து மாணவர்கள் பல்வேறு யோகாசனங்களை செய்து அசத்தினர் இதில் மாணவர்கள் பலரும் பல்வேறு யோகாசனங்கள் செய்து, யோகாவின் முக்கியத்துவத்தை உணர்த்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்நிகழ்வில் பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள், பள்ளி மாணவர்கள் பலரும் கலந்துகொண்டு யோகா தின விழாவை கொண்டாடினர்