ஓசூர்: ஏலம் எடுத்தவர்களுக்கு கடை ஒப்படைத்த மேயர்.
ஓசூர்: ஏலம் எடுத்தவர்களுக்கு கடை ஒப்படைத்த மேயர்.;
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் எம்ஜிஆர் மார்க்கெட் பகுதியில் 5.9 கோடி ரூபாய் மதிப்பில் புதிதாக கடைகள் 158 கடைகள் கட்டப்பட்டுள்ளன. இதில் மீன்மார்க்கெட்டில் நான்கு பிளாக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மார்க்கெட்டில் குளிர்சாதன கிடங்கு புதிதாக அமைத்துள்ளனர். இதில் எட்டு கடைகளை டெபாசிட், ஓராண்டு வாடகை கட்டி ஏலம் எடுத்துவர்களுக்கு ஓசூர் மாநகராட்சி மேயர் எஸ்.ஏ. சத்யா, துணை மேயர் ஆனந்தய்யா, மாநகராட்சி ஆணையர் மாரிச்செல்வி ஆகியோர் கலந்துகொண்டு சாவியுடன் கூடிய சான்றிதழ், கடை ஒப்படைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மண்டலக் குழுத் தலைவர் ரவி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.