ஒரு லட்சம் பேருக்கு இலவச யோகா பயிற்சி வழங்கிய கோவைச் சித்த மருத்துவர்!

யோகா பயிற்சியின் மூலம் உடல் மற்றும் மன நலத்தை மேம்படுத்தி, நூற்றுக்கணக்கானோருக்கு வாழ்க்கை மாற்றத்தை வழங்கி வருகிறார் கோவை மாவட்டம் சூலூரைச் சேர்ந்த சித்த மருத்துவர் துரைசாமி.;

Update: 2025-06-21 09:25 GMT
யோகா பயிற்சியின் மூலம் உடல் மற்றும் மன நலத்தை மேம்படுத்தி, நூற்றுக்கணக்கானோருக்கு வாழ்க்கை மாற்றத்தை வழங்கி வருகிறார் கோவை மாவட்டம் சூலூரைச் சேர்ந்த சித்த மருத்துவர் துரைசாமி. கடந்த 15 ஆண்டுகளாகத் தொடர்ந்து, தன்னுடைய மருத்துவப் பின்னணியுடன் இணைந்து, ஆயிரத்திற்கும் மேற்பட்ட யோகக் கலைகளை தேர்ந்து கற்றுத் தேர்ச்சி பெற்ற இவர், பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் என அனைவருக்கும் இலவசமாக யோகா பயிற்சி அளித்து வருகிறார். இதுவரை, ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட நபர்களுக்கு யோகாவின் அருமை மற்றும் மருத்துவ பயன்களை எடுத்துச் சொல்லி, வாழ்க்கையின் பல்வேறு நிலைகளில் இருந்து அவர்கள் மீண்டு வர உதவியுள்ளார். உலக அளவில் யோகா தினம் கொண்டாடப்படுவது போன்ற நிகழ்வுகள், யோகாவின் பரந்த மகத்துவத்தை வலியுறுத்துகின்றன என்பதைத் தெரிவித்த அவர், உடல்நலம் மற்றும் மன அமைதிக்கு யோகா மிக முக்கியமானதாய் இருப்பதைக் கூடுதல் மக்களுக்கு எடுத்துச் சொல்லும் பணியை தொடர்ந்து செய்வேன் எனத் தெரிவித்துள்ளார். சித்த மருத்துவம் மற்றும் யோகாவை ஒருங்கிணைத்து மக்கள் நலனுக்காக தனது சேவையை அர்ப்பணித்து வருகிற மருத்துவர் துரைசாமிக்கு சமூகத்தின் பல தரப்பிலும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

Similar News