கரூரில் புதிய பேருந்து நிலையம் கட்டுமான பணியை ஆய்வு செய்தார் செந்தில் பாலாஜி.
கரூரில் புதிய பேருந்து நிலையம் கட்டுமான பணியை ஆய்வு செய்தார் செந்தில் பாலாஜி.;
கரூரில் புதிய பேருந்து நிலையம் கட்டுமான பணியை ஆய்வு செய்தார் செந்தில் பாலாஜி. கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தற்போது செயல்படும் பேருந்து நிலையம் போதிய இடவசதி இல்லாமல் பயணிகள், வியாபாரிகளும் , பொதுமக்களும் சிரமத்திற்கு ஆளாகினர். இதனால் கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட திருமாநிலை யூர் பகுதியில் ரூ.40 கோடி மதிப்பில் புதிய பேருந்து நிலையம் கட்டுவதற்கான பணிகள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு துவக்கப்பட்டது. சுற்றுச்சூழல் அனுமதி பெறவில்லை என காரணம் காட்டி பணிகள் நிறுத்தப்பட்டது. பிறகு உயர்நீதிமன்றத்தின் அனுமதி பெற்று பணிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு துவக்கப்பட்டது. தற்போது 80 சதவீதம் பணிகள் நிறைவு பெற்றுள்ள நிலையில்,இன்று மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பேருந்து நிலைய கட்டுமான பணிகளை ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது கரூர் மாநகராட்சி மேயர் கவிதா , துணை மேயர் தாரணி சரவணன் , ஆணையர் சுதா , மாமன்ற மண்டல தலைவர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் , அரசுத்துறை அதிகாரிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.