ஆற்காடு நகரமன்ற கூட்டம்

ஆற்காடு நகரமன்ற கூட்டம்;

Update: 2025-06-21 10:08 GMT
ஆற்காடு நகரமன்ற அவசர கூட்டம் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. நகரமன்ற தலைவர் தேவிபென்ஸ்பாண்டியன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் டாக்டர் பவளக்கொடி சரவணன், ஆணையாளர் வெங்கட்ட லட்சுமணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் உறுப்பினர்கள் தங்கள் வார்டுகளில் நிலவும் பிரச்சினைகள் குறித்தும், வார்டுகளில் செய்ய வேண்டிய பணிகள் குறித்தும் பேசினர். உறுப்பினர் பொன்.ராஜசேகர், "நகரில் குப்பை அள்ளுவதற்கான டெண்டரை எதற்காக ரத்து செய்துள்ளீர்கள் என கேள்வி எழுப்பியதோடு புதிதாக டெண்டர் எடுப்பவர்கள் தினசரி குப்பை களை அகற்றி நகரை சுத்தமாக வைத்துக் கொள்ள அறிவுறுத்த வேண்டும்” என வலியுறுத்தினார். கூட்டத்தில் நகர வளர்ச்சி பணிகள் குறித்து 21 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் நகரமன்ற உறுப்பினர்கள், நகராட்சி அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Similar News